Latestமலேசியா

பெருவில் இரு மலேசிய பெண்களை கடத்தியதாக திருமணமான தம்பதியருடன் இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 29 – Peruவில்  இரு மலேசியப் பெண்களை  கடத்தியதாக    செஷன்ஸ் நீதிமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட  குற்றச்சாட்டை  இரண்டு ஆடவர்களும்  திருமணமான தம்பதியரும்  மறுத்தனர்.  கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம்   7ஆம் தேதி  பெருவில்  La  Lagunaவிலுள்ள வீட்டிலிருந்து  19 மற்றும்  25 வயதுடைய இரு பெண்களை  கடத்தியதாக  37 வயதுடைய Gan Zhang  Gui,  அவரது  34 வயதுடைய  மனைவி  Cham   Li Na   ,   26  வயதுடைய Mohd Ismail   Aiman Muhamad Radhuan,   37 வயதுடைய Lim Chin Hock மற்றும் Peruவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள  Tony  ஆகியோர்  மீது  கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.  குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால்   20 ஆண்டு சிறை மற்றும்   அபராதம்    விதிக்கப்படும்   குற்றவியல் சட்டத்தின்  34 ஆவது விதியின் கீழ்  2007ஆம் ஆண்டின்  குடிநுழைவு சட்டத்தின் கீழ்  ஆள் கடத்தல் சட்டத்திற்கு எதிராக  குற்றஞ்சாட்டப்பட்டது. 

 குற்றஞ்சாட்டப்பட்ட  ஒவ்வொருவருக்கும்  ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் தலா 10,000  ரிங்கிட்    ஜாமின் வழங்குவதற்கு நீதிபதி Azura  Alwi   அனுமதித்தார்.  அதோடு இந்த வழக்கு விசாரணை முடியும்வரை  குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களது    கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபிதி உத்தரவிட்டார்.  அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு   மே 20ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.  குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பெருவில் கைது செய்யப்பட்டு  மேல் விசாரணைக்காக   மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!