Latestமலேசியா

பெர்சமா என்ற புதிய பல்லின அரசியல் கட்சி தொடங்கப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 11 -Bersatu Sasa Malaysia எனப்படும் பெர்சமா ( Bersama) என்ற புதிய அரசியல் கட்சி நேற்றிரவு தொடங்கப்பட்டதோடு அதன் தலைவராக தொழிலதிபர் டேனியல் மர்னோகரன் அப்துல்லா (Danial Marnokaran Abdullah ) நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் சவால்களின் நிலையை உயர்த்துவதற்காக பெர்சமா கட்சி உருவாக்கப்பட்டதாக டேனியல் தெரிவித்தார். தற்போது, அரசியலில் ஈடுபட விரும்பும் எவருக்கும் அவர்களின் பின்னணி, செல்வாக்கு மற்றும் நிதி ஆதரவாளர்கள் குறித்த கேள்விகள் கேட்கப்படும். ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே இக்கட்சியில் பொதுவாக வரவேற்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

அரசியல் முன்னணியில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள எவருக்கும் Bersama கட்சியில் ஒரு தளத்தை வழங்க நாங்கள் விரும்புகிறோம். இதில் அரசியல் வாரிசு இல்லையென டேனியல் தமதுரையில் தெரிவித்தார். மலேசியர்களுக்கு “புதிய குரலை” வழங்குவதற்காக இளம் தொழில் நிபுணர்களால் ஆதரிக்கப்படும் பல இனக் கட்சி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. கட்சி ஏதேனும் கூட்டணியில் சேருமா அல்லது கூட்டணியை உருவாக்குமா என வினவியபோது , அத்தகைய கூட்டணிகள் கட்சியின் தற்போதைய முன்னுரிமை அல்ல என்று டேனியல் மறுமொழி தெரிவித்தார். மாறாக, மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் Check and Balance ஆக மூன்றாவது சக்தியாக திகழும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

நிதி ஆதரவு இல்லாததை ஒப்புக்கொண்ட அவர், மக்களிடமிருந்து மக்களுக்காக Bersama கட்சி இருப்பதால் மக்களின் நன்கொடையை நம்பியிருப்பதாக கூறினார். இதன்வழி மக்களைத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் பதிலளிக்க விரும்பவில்லை என்று அவர் விவரித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் கட்சி பங்கேற்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டேனியல் கூறினார். மேலும் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் சட்டவிதிகள் தொடர்பான ஆவணங்கள் சங்கப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!