
கோலாலம்பூர். நவ 19 – பெர்சே தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக தோமஸ் பான் அறிவித்தார். பெர்சே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் இந்த முடிவை தெரிவித்தார். பெர்சே தலைவர் பதவியிலிருந்து இன்று விலகிவிட்டதாகவும் புதிய தலைமைத்துவம் சுமுகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வரை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாம் அந்த பதவியில் இருக்கப்போவதாக வெளியிட்ட அறிக்கையில் தோமஸ் பான் தெரிவித்தார். மற்றொரு தவணைக் காலத்திற்கு பெர்சே தலைவராக தாம் போட்டியின்றி வெற்றி பெற்ற போதிலும் மக்களின் அமைப்பாக பெர்சே இயக்கத்தை மேம்படுத்தும் முயற்சியை பெர்சேவிலுள்ள பெரும்பாலான அரசு சார்புற்ற இயக்கங்கள் நிராகரித்துவிட்டதாக அவர் கூறினார். இது ஐந்து உயர்மட்ட பதவிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடைபெறும். இந்த பதவிகளை போட்டி குழுக்கள் எடுத்துக்கொண்டுள்ளதால் பெர்சேவுக்கான தமது இலக்கு மற்றும் நோக்கம் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று தெளிவாகிவிட்டதாக தோமஸ் பான் கூறினார்.