Latestமலேசியா

பெர்லிசில் எண்ணெய் நிரப்பும் போது ஏற்பட்ட வெடிப்பில் காரோட்டிக்குக் காயம்

கங்ஙார், மே-18 – பெர்லிசில் எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்த போது, எண்ணெய் டாங்கி திடீரென வெடித்து தீப்பற்றியதில், காரோட்டி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

கங்ஙார், ரெப்போவில் உள்ள எண்ணெய் நிலையமொன்றில் வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அதில் அவரின் கார் முழுவதுமாக எரிந்துப் போனது.

வெடிப்பில் சிதறிய காரின் கண்ணாடித் துண்டுகள் பட்டு 40 வயது மதிக்கத்தக்க அவ்வாடவருக்கு கையில் சிறிய காயமேற்பட்டது.

எண்ணெய் நிலையப் பணியாளகள் சுமார் 15 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்புத் துறையின் தடயவியல் சோதனையில், காரின் முன்பக்க இருக்கையின் இடது புறம் தான் தீயின் தொடக்கப் புள்ளியாக இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அங்கிருந்த கைப்பேசியினால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் தீயணைப்புத் துறை, காரில் இருந்த கைப்பேசி charger-ரையும் சிகரெட்டின் மாதிரிகளையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளது.

தற்போதைக்கு அச்சம்பவம் ஒரு விபத்தாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது; அதில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!