Latestமலேசியா

பேங்க் நெகாரா மலேசியாவின் நிர்வாகி கோகிலாவை வேலையிலிருந்து நீக்கியது தவறு – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், மார்ச் 29 – ஏழு ஆண்டுகளுக்கு முன்   பேங்க் நெகாரா மலேசியாவின்  நிர்வாகி Y. Kohila வை வேலையிலிருந்து   நீக்கியது தவறு என்பதால்  அதற்கு அந்த  வங்கி முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என    கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்   தீர்ப்பளித்தது.  அரசியலில்    ஈடுபட்டிருந்தார்  என்று   கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணையின்றி , முறையான விசாரணை நடத்தாமல்   மற்றும் முறையீடுக்கான வாய்ப்பு வழங்காமல்    48 வயதுடைய கோகிலாவை   பேங்க் நெகாரா வேலையிலிருந்து நீக்கியிருப்கிறது என   நீதிபதி  Ahmad  Bache  தீர்ப்பளித்தார்.  கோகிலாவுக்கு எதிரான வேலை நீக்க நடவடிக்கையில் இயற்கை  நீதி ( Natural Justice ) மீறப்பட்டுள்ளது.   நியாயமற்ற  வகையில்  அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அந்த நடவடிக்கைக்காக அவருக்கு நியாயமான  இழப்பீடு  பெறுவதற்கான  அவரது   வழக்கு மனுவை  நீதிபதி அனுமதித்தார்.  

வேலை உடன்பாடு மீறியிருக்கும்  வகையில்  கோகிலாவுக்கு எதிரான வேலை நீக்கம் இருப்பதையும்  நீதிபதி சுட்டிக்காட்டினார்.  நியாயமற்ற வகையில் கோகிலா வேலையிலிருந்து நீக்கப்பட்டதால்   அவர்   அதிக இழப்பை எதிர்நோக்கியிருக்கிறார்.   அவருக்கு   வழங்க வேண்டிய   இழப்பீடு மற்றும் செலவுத் தொகையை நீதிமன்றம் பின்னர் தெரிவிக்கும் என   நீதிபதி     Ahmad  Bache தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!