Latestமலேசியா

பேரங்காடிகளின் முன்னோடி தெங் இயு ஹுவாட் மறைவு

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 24 – உள்ளூர் பேரங்காடிகளின் முன்னோடி என போற்றப்படும் Teng Yew Huat 68 வயதில் காலமானார்.

அவர், Teng மினிமார்க்கெட்டில் ஆரம்பித்து, Giant ஹைப்பர்மார்க்கெட் என உயர்ந்து,   Jaya Grocer  என மாபெரும் பேரங்காடி சங்கிலியை கட்டமைத்தவர் ஆவார்.

Yew Huat-டின் மறைவுச் செய்தியை அறிவித்த  Jaya Grocer தலைமை செயல் அதிகாரி Adelene Foo, அவரின் மறைவு நிறுவனத்திற்கும் பேரங்காடி தொழில் துறைக்குமே பேரிழப்பு என்றார்.

எங்கள் நிறுவனத்தின் அபரிமித வளர்ச்சியின் பின்னால் இருதயமாகச் செயல்பட்டு மிகப் பெரிய உந்துச் சக்தியாக இருந்தவர் Yew Huat என Adelene குறிப்பிட்டார்.

அவரின் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

1944-ல் கோலாலம்பூர் ஜாலான் செந்தூலில் மளிகைக் கடையாக சில்லறை வணிகத்தில் தொடங்கியது தான் தெங் குடும்பத்தின் வர்த்தக வரலாறு. 

தந்தையிடம் பெற்ற வணிக அனுபவத்தைக் கொண்டு காலப் போக்கில் Yew Huat-டும் அவரது சகோதரர் பிரான்சிசும் இணைந்து Teng மினிமார்க்கெட்டுகளைத் தொடங்கினர்.

அது பங்சாரில் Teng மினிமார்க்கெட் மையமாக விரிவடைந்து, பின்னாளில் சிலாங்கூர் கிளான ஜெயாவில் Giant பேரங்காடியாக உருவெடுத்தது.

Teng மினிமார்க்கெட்டையும், Giant பேரங்காடியைம் பின்னர் ஹாங் காங் பால் பண்ணை நிறுவனத்திடம் அவர்கள் விற்று விட்டனர்.

கடைசியில் Teng சகோதர்கள் உருவாக்கியது தான் Ace Hardware கட்டமைப்பும், Jaya Grocer பேரங்காடி சங்கிலியும்.

2021 டிசம்பரில் Jaya Grocer, Grab நிறுவனத்திடம் விற்கப்பட்டது.

அந்த விற்பனை அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதில் ஒரு பங்கை வாங்கி 2016-ல் சிங்கப்பூர் நிறுவனத்டிடம் Yew Huat விற்று விட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!