Latestமலேசியா

பேரரசரை சிறுமைப்படுத்தியதாக ஆடவர் மீது மீண்டும் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 19 – சமூக வலைத்தளத்தில் பேரரசரை சிறுமைப்படுத்தியதாக ஏற்கனவே மூன்று முறை குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் மீது மீண்டும் மற்றொரு குறறச்சாட்டு கொண்டு வரப்பட்டது. பேரரசர் மற்றும் பேரரசியாருக்கு எதிராக எதிர்ப்பான வார்த்தைகளை வெளியிட்டதாக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாடுக்களை 40 வயதுடைய Sharil Sarif ஒப்புக்கொண்டார். தாம் கெடாவில் சுங்கைப் பட்டாணியில் மனநல சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து Sharil லை பேரா, உலு கிந்தாவிலுள்ள Hospital Bahagia மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கும்படி நீதிபதி N .Priscilla Hemamalini உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!