Latestமலேசியா

பொங்கல் திருநாள் காலத்தில் பினாங்கில் நீர் விநியோகத் தடையா?

பினாங்கு, டிச 10 – அடுத்தாண்டு ஜனவரி 10 முதல் 14, வரை நான்கு நாட்களுக்கு தண்ணீர் விநியோகத் தடை இருக்கும் என்று பினாங்கு நீர் விநியோகக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தயாராக இல்லாத பயனீட்டாளரான மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார் பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

காலமுறை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் அவசியம் என்றாலும், நான்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதுவும் குறிப்பாக பொங்கல் சமயத்தில் இவ்வாறான தடையை விதிப்பது சற்று கடுமையானது என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த நீர் விநியோகத் தடை குறித்தும் தங்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் தொழிற்சாலைகள் புகார் கூறியுள்ளன.

ஜனவரி 15ஆம் தேதி தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாடவிருக்கும் இந்திய சமூகம், முன்மொழியப்பட்ட நீர் விநியோகத் தடை குறித்து வருத்தத்தில் உள்ளது.

இதனிடையே, பொங்கல் சமயத்தில் நீர் வெட்டு தேதிகளை பினாங்கு நீர் விநியோகக் கழகம் ஏன் நிர்ணயிக்கிறது என்பது நியாயமாக இல்லை.

தொழில்நுட்ப யுகத்தில், பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஏன் நான்கு நாட்கள் தேவை? இந்தப் பணிகளுக்குத் தேவையான நேரத்தைக் குறைக்க வழிகளும் வழிமுறைகளும் இல்லையா ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசிய உரிமை கட்சி பொங்கலுக்கு பொது விடுமுறையை முன்வைத்து போராடும் நேரத்தில் இதுபோன்ற குறுக்கீடுகள் வேதனையைத் தருகின்றன என்றும் ராமசாமி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!