Latestஉலகம்

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவற்கு மலேசியா உஸ்பெகிஸ்தான் இணக்கம்

சமர்கான்ட், மே 19 – மலேசியாவும், Uzbekistan தானும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு   இணக்கம்  கண்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான  அரச தந்திர உறவுகள்  40 ஆண்டுகளாக  நீடித்து வந்தபோதிலும் மலேசியாவின்  2030 ஆம் ஆண்டு  புதிய தொழில் பெருந்திட்டத்திற்கு ஏற்ப  உஸ்பெகிஸ்தானுடன்  ஒத்துழைப்பை   மேம்படுத்திக் கொள்ளும்  முயற்சிக்கான   கடப்பாட்டை மலேசியா கொண்டுள்ளதாக    அனைத்துலக முதலீடு , வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  Tengku Zafrul  தெரிவித்திருக்கிறார்.  வர்த்தகத்தில்  தொடர்புகளை    அதிகரித்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத் துறையில் பங்காளித்துவத்தை  ஏற்படுத்திக் கொள்ள முடியும் .

 

உஸ்பெகிஸ்தான் வட்டாரத்தில் விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் மலேசிய நிறுவனங்களுக்கு   அதிகமான  வாய்ப்புகளை வழங்குவதற்கு அந்நாட்டின்   பொருளாதார வளர்ச்சி  முக்கிய பங்காற்ற முடியும் என   அவர்  கூறினார்,   Silk Road  Samarkand  வளாகத்தில்     உஸ்பெகிஸ்தான் – மலேசிய உயர் நிலை வர்த்தக கருத்தரங்கில்   உரையாற்றியபோது   Tengku Zafrul  இதனை தெரிவித்தார். இந்த கருத்தரங்கில்    பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்    உஸ்பெகிஸ்தான  துணைப் பிரதமர்  Jamshid Khodjaev ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!