
குவாந்தான், மே-23,
போதைப்பொருள் கலந்த ‘mushroom’ வேப் புகைத்த மயக்கத்தில், தனது 4 சக்கர வாகனத்தை கடையில் கொண்டு மோதியுள்ளான் 21 இளைஞன் ஒருவன்.
இச்சம்பவம் நேற்று காலை வாக்கில் பஹாங், ஜாலான் பெசார் குவாந்தான் சாலையில், தளவாடங்களை விற்கும் ஒரு கடையில் நிகழ்ந்தது.
வாகனம் மோதி நின்றதில் 68 கடைப் பணியாளர் காயமடைந்தார்.
அவ்வழியே ரோந்து பணியிலிருந்த போலீஸார், சம்பவ இடம் விரைந்து வாகனத்தை பரிசோதித்ததில், அதில் செயற்கைப் போதைப்பொருள் கலந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைக் கைப்பற்றினர்.
இதையடுத்து அவ்விளைஞன் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டான்.
சம்பவத்தில் இடது கால் முட்டியிலும், வலது கையிலும் காயமடைந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.



