Latestமலேசியா

போதைப்பொருள் வழக்கில் ‘நாம்வீ’ விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர், மே-14 – மலேசிய பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வீ மெங் சீ (Wee Meng Chee), அல்லது “நாம்வீ” (Namewee) மீது பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளிலிருந்து இன்று நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

கோலாலம்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, வழக்குகளைத் திரும்பப் பெற ‘நாம்வீ’ தாக்கல் செய்திருந்த இரண்டாவது மனுவை சட்டத்துறை தலைவர் அலுவலகமான AGC ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் அவரை விடுவிக்கும் உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 2025 அக்டோபர் 22ஆம் தேதி, ஜாலான் கொன்லேயில் (Jalan Conlay) உள்ள ஹோட்டல் அறையில் 0.78 கிராம் சில்டெனாஃபில் (sildenafil) மற்றும் 1.57 கிராம் மெத்தாம்பெட்டமைன் (methamphetamine) போன்ற போதைப்பொருட்களை வைத்திருந்ததாக நாம்வீ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

கடந்த ஜனவரி மாதத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியிருந்தார்.

முன்னதாக தைவான் இணையப் பிரபலமான ஹ்சியே யுன் சின் (Hsieh Yun Hsin) உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த பின்னர், நாம்வீ அந்த ஹோட்டலில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!