Latestமலேசியா

தோழியை துன்புறுத்திய வழக்கு: தடுப்புக் காவலில் 2 பெண்கள்

பத்து பாஹாட், மே-14 – தோழியை அடைத்து வைத்து தாக்கி, நிர்வாணமாக்கி காணொளி பதிவு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களை போலீசார் ஆறு நாட்கள் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

29 மற்றும் 46 வயதுடைய அந்த பெண்கள், இன்று பத்து பாஹாட் (Batu Pahat) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

32 வயதுடைய பெண் ஒருவர், நேற்று காலை தாமான் பானாங் ஹெயிட்ஸ் (Taman Banang Heights) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றபோது, மூன்று ஆண்கள் சேர்ந்து அவரை அடைத்து வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், லைட்டர் கொண்டு அவரது காலில் தீக்காயம் ஏற்படுத்தி, நிர்வாணமாக்கி புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 4,200 ரிங்கிட் பணத்தையும் கைப்பேசியையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று ஆண்களை போலீசார் வலை தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!