Latestஉலகம்

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் சோதனை பயணம் ; இவ்வாரத்தில் மேற்கொள்ளப்படும்

கோலாலம்பூர், மே 30 – நாசா விண்வெளி வீரர்களை, தனது ஸ்டார்லைனர் விண்கலத்தில், அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஏற்றி செல்லும் மற்றொரு சோதனை பயனத்திற்கு போயிங் தயாராகி வருகிறது.

முதல் முறையாக, விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணிக்க, நாசா விண்வெளி வீரர்கள் போயிங்கின் ஸ்டார்லைன் விண்கலத்தை பயன்படுத்தவுள்ளனர்.

முதலில் அந்த சோதனை பயணம், இம்மாதம் தொடக்கத்தில், ஆறாம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அந்த பயணம் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரங்களே எஞ்சியிருந்த சமயத்தில், “அட்லால் வி” ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்சனையால், அந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, இவ்வாரம் அந்த சோதனை பயணம் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் கூட்டு முயற்சியின் உருவான யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் வடிவமைத்த “அட்லஸ்” ராக்கெட் வாயிலாக அந்த விண்கலன் பூமியன் சுற்றுப் பாதைக்குள் செல்லும்.

ஸ்டார்லைனர் விண்கலனால், விண்வெளி வீரர்களை, பாதுகாப்பாக விண்வெளி நிலையத்திற்கு ஏற்றிச் செல்ல முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவே அந்த சோதனை பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த பயணம் வெற்றி அடைந்தால், அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு வழக்கமாக பயணிக்க நாசா ஸ்டார்லைனருக்கு அனுமதி வழங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!