Latestமலேசியா

போலி மருத்துவ விடுப்பு சான்றிதழை விற்ற கும்பல் கைது

ஷா ஆலாம் , பிப் 9 – போலி மருத்துவ விடுப்பு சான்றிதழை அச்சிட்டு விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உட்பட நால்வர் ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டனர் .

கைதானவர்கள் அனைவரும் 22 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என சிலாங்கூர் குற்றப் புலனாய்வு துறையின் தலைவர் Azman Ali தெரிவித்தார்.

அந்த கும்பல் , நாட்டில் 2020-இல் , மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட கால கட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் போலி விடுப்பு சான்றிதழை 40 ரிங்கிட்டுக்கு விற்று வந்ததாக Azman Ali குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!