கோலாலம்பூர், பிப் 21- நாட்டில் தடுப்புக் காவலின் போது மேலும் ஒரு நபர் உயிரிழந்திருக்கிறார். இம்முறை ஜோகூர், Seri Alam மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்ட 49 வயது மதிக்கத்தக்க ஆடவர் உயிரிழந்திருப்பதாகவும், அவருக்கு கோவிட் தொற்று கண்டிருந்ததாகவும் புக்கிட் அமான் உயர்நெறி கட்டுப்பாட்டு துறையின் இயக்குநர் Azri Ahmad தெரிவித்தார்.
போதைப் பொருள் குற்றத்திற்காக அந்நபர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். அந்நபரின் உயிரிழப்புடன், நாட்டில் இவ்வாண்டில் மட்டும் தடுப்புக் காவலில் மொத்தம் 10 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.