
மும்பை, ஆகஸ்ட்-11-இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பழங்குடியினர் பள்ளி விடுதியில், விஷப்பாம்பு தீண்டியதில் 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிராமத்தில் இயங்கி வரும் பழங்குடியினர் பள்ளி விடுதியில், மாணவர்கள் நள்ளிரவில் தரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
தரையில் தூங்கிய 6 மாணவிகளை விஷப்பாம்பு கடித்த நிலையில், 8 முதல் 14 வயதுடைய 3 மாணவிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
விடுதியில் கட்டில்கள் இல்லாமல் மாணவிகளைத் தரையில் தூங்க வைத்தது மற்றும் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது தொடர்பாக மாணவிகளின் குடும்பத்தார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது அலட்சியம் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



