Latestமலேசியா

மக்களின் ஒற்றுமையை அளவிட மதிப்பீட்டு குறியீடு ; தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கொண்டுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 1 – மலேசியர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அளவிட, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, IPNas எனப்படும் மதிப்பீட்டு குறியீடு ஒன்றை கொண்டுள்ளது.

அந்த IPNas குறியீடு, நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

0.0-0.24 வரை பதிவானால், ஒற்றுமையின் பலவீனமான நிலை எனவும் ;

0.25-0.49 வரை குறைந்த அளவிலான ஒற்றுமை எனவும் ;

0.50-0.74 வரை மிதமான நிலை எனவும் ; 0.75-1.0 வரை உயர் நிலை ஒற்றுமை எனவும் அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த குறியீட்டின் அடிப்படையில், 2022-ஆம் ஆண்டு பதிவான 0.629 மதிப்பெண், நாட்டின் சூழல் மிதமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும், அது 2015-ஆம் ஆண்டு பதிவுச் செய்யப்பட்ட 0.567 மதிப்பெண்ணுடன் ஒப்பிடுகையில் சிறந்த சூழல் எனவும் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மேலவையில் இன்று தெரிவித்தார்.

அந்த குறியீட்டின் வாயிலாக, மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்த, தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அடையாளம் கண்டு செயல்படுத்த அரசாங்கத்தால் முடிவதாகவும் துணையமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!