Latestமலேசியா

மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி அதனைக் கட்டிக் காக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் அறைகூவல்

ஜொகூர் பாரு, மே-26 – இனவாதம் – மதவாதம் போன்ற குறுகிய சிந்தனையும், வரம்பு மீறிய மாநிலவாதமும் வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து விடும்.

எனவே மக்கள் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மதவாதமும் இனவாதமும் நிச்சயம் நம்மை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுச் செல்லாது.

அதே போல் தான் மாநிலவாதமும்; என் மாநிலமே சிறந்தது, எங்களை யாரும் தொட முடியாது என மற்ற மாநிலங்களைச் சினமூட்டும் வகையில் நடந்துக் கொள்வதும் அழிவுக்கு இட்டுச் செல்லும்.

அப்படி நடந்தால், பல்லின மக்களை அரவணைத்து நம் முன்னோர்கள் கட்டியெழுப்பிய இந்த பெருமைமிகு தேசம் பாழாகி விடும் என பிரதமர் எச்சரித்தார்.

இந்த ஒற்றுமையும் புரிந்துணர்வும் காலத்திற்கும் கட்டிக் காக்கப்படுவதை, இளையத் தலைமுறை உறுதிச் செய்ய வேண்டும்.

மக்கள் ஒன்றுபட்டால் தேசமே வளம்பெறும்; பிளவுப்பட்டால் அது அழிந்துப் போகும் என்பதை எந்நேரமும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தேசிய அளவிலான 2024 ஒற்றுமை வாரத்தை நேற்றிரவு ஜொகூர் பாருவில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறுக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!