Latestஉலகம்மலேசியா

மற்ற சமயங்கள் மீது அனுதாபம் காட்டுவீர்; முஸ்லீம்களுக்கு பிரதமர் அன்வார் நினைவுறுத்து

கோலாலம்பூர், மே 25 – மற்ற சமயத்தவர்களிடம் அனுதாபம் காட்டுவதும் , சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதும், பேணுவதும் முஸ்லீம்களின் கடமை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அத்தகைய அனுதாபம் இரு தரப்புகளிடமும் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முஸ்லீங்கள் பிற சமயங்களைப் புரிந்துகொள்வதும், இரக்கம் காட்டுவதும் எவ்வளவு இன்றியமையாததோ, அதேபோன்று பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் பிறர் இஸ்லாத்தின் மீது அதே அணுகுமுறைகைளை கொண்டிருப்பதும் அவசியம் என ஜப்பானில் Keio பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது அன்வார் கேட்டுக் கொண்டார்.

சமூகங்களை பிளவுபடுத்தும் மற்றும் அமைதியை சீர்குலைக்க அச்சுறுத்தும் வளர்ந்து வரும் இருட்டடிப்பு, சமய தீவிரவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு எதிரான பல்வேறு சமயங்கள் மற்றும் பின்னணியில் உள்ள மக்களிடையே மேலும் வெளிப்படையான உரையாடலுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மறைந்த ஜப்பானிய அறிஞரும், இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் சமய ஒப்பீட்டு விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவருமான பேராசிரியர் Toshihiko Izutsu வை கௌரவிக்கும் விழாவில் அன்வார் உரையாற்றினார். ஜப்பானிய மொழியில் திருக்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பாளராக Toshihiko அறியப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!