
அலோர் காஜா, மார்ச்-26-மலாக்கா, அலோர் காஜாவில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தாய் என நம்பப்படும் 19 வயது பெண் உட்பட 5 பேரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.
16 முதல் 40 வயதிலான அந்த ஐவரில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள் ஆவர்.
அவர்கள் முறையே அப்பெண்ணின் காதலன், தாய், அக்காள் மற்றும் 16 வயது தம்பி என மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ Dzulkhairi Mukhtar கூறினார்.
அவர்களை விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட ஏதுவாக, அலோர் காஜா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்படும் என்றார் அவர்.
குழந்தையின் மரணம் எப்படி நிகழ்ந்தது, எலும்புக்கூடு எவ்வாறு மறைக்கப்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 மாதங்களுக்கு முன் பிறந்த அக்குழந்தை, முன்னதாக Klemak-கில் உள்ள வீட்டொன்றின் முற்றத்தில் எலும்புக் கூடாக புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
Melaka, police, arrest, five, including, mother, baby, skeletal, remains, recovered,



