
மலக்கா, ஜூலை 24 – மலாக்கா பத்து பெரெண்டத்திலுள்ள (Batu Berendam) மலாக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக சமூக வலைத்தளங்களில் பரவிய காட்சி, உண்மையில் ‘Exercise Laksamana 2026’ என்ற விமானப் பேரிடர் அவசரகால ஒத்திகை பயிற்சியாகும்.
இந்தப் பயிற்சியின் மூலம் விமான விபத்து நேர்ந்தால் மீட்பு மற்றும் அவசர சேவை அமைப்புகளின் தயார் நிலை, செயல்முறை மற்றும் ஒருங்கிணைப்பு சோதிக்கப்பட்டது. இதில் ஏழுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்களாக நடித்து, மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் முகமட் ஷாஹ்ரோம் லாஜி (Mohd Shahrom Laji), உண்மையான பேரிடர் நேரங்களில் அனைத்து அமைப்புகளும் விரைவாகவும் திறம்படவும் செயல்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.



