Latestமலேசியா

மலாய்க்காரர் அல்லாதார் பிரதமராக முடியும் உரை தொடர்பில் லிம் கிட் சியாங் போலீசிடம் விளக்கம் அளிப்பார்.

கோலாலம்பூர், டிச 11 – மலாய்க்காரர் அல்லாதர் பிரதமராக நியமிக்க முடியும் என்று அண்மையில் தாம் வெளிநாட்டில் ஆற்றிய உரை குறித்து டி.ஏ.பியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் போலீசிடம் வாக்குமூலம் அளிக்கவிருக்கிறார்.

மலாய்க்காரர் அல்லாதார் பிரதமராக வருவதற்கு கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் தடுக்கவில்லை என்ற போதிலும் தாம் உணர்ச்சிகரமான விவகாரத்தை எழுப்பியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் லிம் தெரிவித்திருக்கிறார்.

சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் தலைமையேற்பதற்கு அமெரிக்காவைப் போல் மலேசியா நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லையென கடந்த மாதம் பிரிட்டனில் மலேசிய மாணவர்களிடையே உரையாற்றியபோது இஸ்கந்தர் புத்தேரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்த 230 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அந்நாட்டின் தலைவராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியிருந்தார். மலேசிய மக்கள் இன பாகுபாடு இன்றி இத்தகைய கனவை காணமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

எனினும், அடுத்துவரும் 100 ஆண்டுகளில் மலாய்காரர் அல்லாதார் பிரதமராக வரமுடியாது என்றும் அவர் கூறினார். லிம் கிட் சியாங் ஆற்றியிருந்த உரை மலாய்காரர்களின் உணர்வுளை புண்படுத்தியிருப்பதாக அம்னோ உச்சமன்றத்தின் உறுப்பினர் ஹஸ்முனி ஹாசன் உட்பட பல தரப்பினர் குறை கூறியிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!