Latestமலேசியா

மலேசியக் கப்பல் ‘GSF 2.0’ இடைமறிப்பு: 10 மலேசியர்களின் நிலை என்ன?

கோலாலம்பூர், ஏப்ரல்-30-மலேசியாவுக்குச் சொந்தமான ‘GSF 2.0’ மனிதநேய உதவிக் கப்பல், மத்தியத் தரைக்கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த 10 மலேசியர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இன்று அதிகாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், முதலில் Safsaf, Snap, Al-Faluja, Eros, Eros 1st, Romantica, Nagual ஆகிய 7 கப்பல்கள் இடைமறிக்கப்பட்டு, கடத்தப்பட்டன; பின்னர் Marea, Freia, Biaca ஆகிய மேலும் 3 கப்பல்கள் இடைமறிக்கப்பட்டன.

கப்பலில் இருந்த மலேசியப் பணியாளர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் அல்லது அவர்களின் பாதுகாப்பு நிலை என்ன என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!