Latestவிளையாட்டு

மலேசியாவின் ஸ்குவாஸ் வீராங்கனை சிவசங்கரி உலகின் 17ஆவது நிலை ஆட்டக்காராக முன்னேற்றம்

கோலாலம்பூர், நவ 29 – மலேசியாவின் முன்னணி ஸ்குவாஸ் வீராங்கனையான S. சிவசங்கரி உலகின் சிறந்த ஸ்குவாஸ் விளையாட்டாளர்கள் பட்டியலில் 17ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் ஹாங்காங் ஸ்குவாஸ் போட்டி மற்றும் சிங்கப்பூர் போட்டியில் உலகின் முன்னணி ஸ்குவாஸ் விளையாட்டாளர்களை வீழ்த்தியதைத் தொடர்ந்த 24 வயதுடைய சிவசங்கரி உலக முன்னணி ஸ்குவாஸ் வீராங்கனைகளின் பட்டியலில் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.

ஹாங்காங் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றவருமான சிவசங்கரி எகிப்தின் முன்னணி ஸ்குவாஸ் வீராங்கனைகளான ஹனா, நூர் எல் டேயன், இங்கிலாந்தின் சாரா-ஜேன் பெர்ரி, அமெரிக்காவின் Sabrina Sobhy போன்றோரை இவ்வாண்டு வீழ்த்தியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியயில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றவருமான சிவசங்கரி ஜப்பானின் சாதோமி வதனாபேவுக்கு அருகே உலக தர வரிசையில் உயரிய இடத்தை அடைந்த ஆசியாவின் ஸ்குவாஸ் விளையாட்டாளராக விளங்குகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!