Latestமலேசியா

மலேசியாவில் ‘சூப்பர் எல் நினோ’ தீவிரமடைய 90% வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-நாட்டில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையே ‘Super El Nino எனும் அதீத வெப்பக் காலநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia எச்சரித்துள்ளது.

​இது வழக்கத்தை விட அதிக வெப்பத்தையும், தீவிர வறட்சியையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

​கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1.8 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதால், எல் நினோ தீவிரமடைந்து இவ்வாண்டு இறுதியில் உச்சத்தை எட்டும் என MetMalaysia தலைமை இயக்குநர் ஜெனரல் Dr முகமட் ஹிஷாம் அனிப் தெரிவித்தார்.

​இந்த நிகழ்வு, 1997 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் பதிவான தீவிர வெப்ப அலைகளுக்கு இணையான அல்லது அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

​குறிப்பாக அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும், மழைப்பொழிவு வெகுவாகக் குறையும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே ​பொது மக்கள் கடுமையான வெயில் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!