Latestவிளையாட்டு

மலேசியா காற்பந்து குழு தற்போது 130ஆவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது

கோலாலம்பூர், டிச 1 – அனைத்துல காற்பந்து சம்மேளனமான FIFA வெளியிட்ட தர வரிசைப் பட்டியலில் தற்போது மலேசியாவின் ஹரிமாவ் மலாயா குழு ஏழு இடங்களுக்கு முன்னேறி 130 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியப் பயிற்சியாளர் கிம் பான்-கோன் தலைமையிலான மலேசிய குழு மொத்தம் 1,122 .87 புள்ளிகளைப் பெற்று 137ஆவது இடத்திலிருந்து 130 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்திருப்பதாக FIFA தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான பிரிவுக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் கிர்கிஸ்தான் குழுவை 4 – 3 என்ற கோல் கணக்கிலும் தைவான் குழுவை 1 – 0 என்ற கோல் கணக்கிலும் வென்றதன் மூலம் மலேசியா இந்த முன்னேற்றத்தைப் பெற்றது. இவ்வாண்டு இறுதிக்குள் 120 ஆவது இடத்தை அடைய வேண்டும் என்பதே தங்களது இலக்கு என மலேசிய காற்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!