Latestமலேசியா

மலேசியா Legendary Riders கழகத்தின் சமூக சேவை: சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு உதவி

சுங்கை பூலோ, ஜூன் 2 – Singapore, Brunei, India, Thailand, Vietnam, மலேசியா என 6 நாடுகளை ஒன்றிணைத்து, 6 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது மலேசியா Legendary Riders எனும் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களின் கழகம்.

மலேசியாவில் மட்டுமே ஆண், பெண் என பல்லினத்தவர்களைக் கொண்டு, ஏறக்குறைய 160 உறுப்பினர்களுடன் செயல்படும் இந்த கழகமானது, சுற்றுப்பயணம் மட்டுமின்றி சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் என 3 அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியும் உதவி வருகிறது.

அவ்வகையில், கடந்த மே மாதம் 31ஆம் திகதி அன்று, சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இவர்கள் உதவி கரம் நீட்டினர்.

அப்பள்ளியின் தலைமையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க நீர் தூய்மையாக்கம் எனும் water purification, எழுத்துப் பயிற்சி புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், Inkjet, Printer, கால்பந்துகள், பூப்பந்து மட்டைகள் ஆகியவற்றை வழங்கியதாக அதன் தோற்றுநரும் தலைமை இயக்குநருமான Magendramani Raghavan தெரிவித்தார்.

உதவி தேவைப்படுவோருக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் எனும் மேன்மையான நோக்குடன் செயல்படும் இந்த மலேசியா Legendary Riders கழகம், முன்னதாக Setapak PPR Air Panas B40 குடும்பங்களுக்கு, Kuala Kubu முதியோர் இல்லங்களுக்கு, வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உட்பட பல வகையில் இவர்கள் நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கழகம் அரசாங்கத்தால் ஆர்.ஓ.எஸ் எனும் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!