Latestஉலகம்

மலேசிய எரிபொருள் நிலையங்களை சவூதி அராம்கோ நிறுவனத்திற்கு விற்பதற்கு ஷெல் பேச்சு நடத்தி வருவதாக – தகவல் வெளியாகியுள்ளது

சிங்கப்பூர், மே 7 – எரிசக்தி நிறுவனமான  Shell , Saudi Arabia அரசுக்குச் சொந்தமான Saudi Aramco வுடன்  மலேசியாவில் தனது எரிவாயு நிலைய வணிகத்தை விற்பதற்கு  பேச்சு நடத்தி வருகிறது.  இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய தொழில்துறை வர்த்தக  நிறுவனம்  ஆகும். 1 பில்லியன் சிங்கப்பூர்  டாலர்வரை இதன்  கொள்முதல்  இருக்கக்கூடும் என அது தொடர்பான பேச்சுக்களை அறிந்த நான்கு தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

பேச்சுக்கள் நடைபெற்று வருவது குறித்து கருத்து தெரிவிக்க Shell மறுத்துவிட்டது.  ஆனால் நிறுவனத்திற்கு முக்கியமான நாடு  மலேசியா என Shell  கூறியுள்ளது. எனினும் இது குறித்து கருத்துரைக்க  Saudi  Aramco   நிறுவனம் மறுத்துவிட்டது. 

லண்டனைத் தளமாகக் கொண்ட Shell , தென்கிழக்காசிய நாடுகளில்   சுமார் 950 எரிபொருள் நிலையங்களை  வைத்திருக்கிறது அதன் இணையதள தகவலின்படி தெரியவருகிறது. 

மலேசிய அரசாங்கத்திற்கு  சொந்தமான  Petronas மட்டுமே பெரிய வர்த்தக நிறுவனமாக திகழ்கிறது. கடந்த  2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  தொடங்கிய இந்த பேச்சுக்கள்  எதிர்வரும் மாதங்களில் உடன்பாடு  முடிவடையும் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில்  சுருக்கமாக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் ரிங்கிட்வரை  அல்லது 844 மில்லியன்   சிங்கப்பூர்  டாலர் முதல் 1.06 பில்லியன் சிங்கப்பூர் டாலர்வரை சாத்தியமான உடன்பாடு அமையக்கூடும்  என இரண்டு  தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!