Latestமலேசியா

மலேசிய – சிங்கப்பூர் எல்லையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் VEP அனுமதி விதிமுறை அமல் – அந்தோணி லோக்

அக்டோபர்  1ஆம் தேதி  முதல் மலேசியாசிங்கப்பூர் தரை மார்க்க எல்லையில் VEP எனப்படும்  வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி விதிமுறைகளை  போக்குவரத்து அமைச்சு  அமல்படுத்தும். ஜொகூர்  பாலத்தில் Sultan Iskandar கட்டிடத்தின் சுங்க , குடிநுழைவு மற்றும்  தனிமைப்படுத்தும்   வளாகம் மற்றும் சுல்தான்  Abu Bakar  கட்டிடத்தின் CIQ வளாகத்தை தாண்டி , மலேசியசிங்கப்பூர்  இரண்டாவது  வழி சாலையை கடக்கும்  சிங்கப்பூரில் இருந்துவரும்  வெளிநாட்டு வாகனங்களின் உரிமையாளர்கள்   வாகன நுழைவு அனுமதி  விதிமுறையில் உட்படுத்தப்படும் என  போக்குவரத்து அமைச்சர்    Anthony Loke   தெரிவித்தார். 

VEP இல்லாத வெளிநாட்டு மோட்டார் வாகனங்கள்  1987 ஆம் ஆண்டின்  சாலை போக்குவரத்து சட்டம்   ( 333 ஆவது சட்டம் )  பிரிவு 66H  உட்பிரிவு (7), இன் கீழ் குற்றம் செய்ததாகக் கருதப்படும்.  குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டம் 333 இன் கீழ் பிரிவு 119 (2) இன் படி 2,000 ரிங்கிட்டிற்கு மேல்  அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு  மேற்போகாமல்  சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும், VEP இல்லாத வெளிநாட்டு வாகனங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கும் அதிகாரம்   JPJ  எனப்படும் சாலைப் போக்குவரத்துத் துறைக்கு  இருப்பதாக  இன்று செய்தியாளர் கூட்டத்தில் Anthony Loke தெரிவித்தார். குடியரசின் அனைத்து வெளிநாட்டு மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களும் தங்கள் வாகனத்திற்கான VEP யைப்  பெறுவதற்கு காலாவதியாக இருக்கும் VEPஐ புதுப்பிக்க அல்லது பதிவு செயல்முறையை முழுமையாக்கும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!