
கோலாலம்பூர், ஆகஸ்ட்-1-பிரபல தமிழ் மற்றும் மலாய் பாடகர் சுபிர் கான் (Zubir Khan), மருத்துவர் ஹேமா மாலினியை (Dr. Heama Maleini) திருமணம் செய்து புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த எளிமையான திருமண விழாவில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.
பாரம்பரிய உடையில் கம்பீரமாக காட்சியளித்த இந்த ஜோடி, தங்களின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழ்த்திய அனைத்து இரசிகர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
விரைவில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலைத்துறையினரையும் நண்பர்களையும் அழைத்துச் சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மணமக்களான சுபிர் கான் மற்றும் ஹீமா மாலினி தம்பதியினருக்கு நமது இனிய நல்வாழ்த்துகள்.



