
மும்பை, ஜூன்-25-இந்தியா, மும்பையில் ஓடும் மின்சார இரயிலில், கனமழை காரணமாகப் பெட்டியின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 21 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு விரைவு இரயிலொன்றின் முதல் வகுப்புப் பெட்டியில் நடந்துள்ளது.
பயணத்தின் போது, கதவை மூடுவது தொடர்பாக அவ்வாடவருக்கும் மற்றொரு பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இடையில் மற்ற சில பயணிகள் சந்தேக நபரைத் தாக்கியதால் ஆத்திரமடைந்த அவர், தனது பையிலிருந்த பெரிய கத்தியை எடுத்து அந்த இளைஞரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில், குத்து வாங்கியவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இது குறித்து வழக்குப் பதிவுச் செய்த இரயில்வே போலீஸார், தலைமறைவாக இருந்த சந்தேக நபரைக் கைதுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



