Latestமலேசியா

மாணவர் உயிரிழந்த விபத்து: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது வழக்கு

ஜாசின், செப்டம்பர் 2 – ஆம்புலன்ஸை கவனக்குறைவாக ஓட்டி மாணவர் ஒருவர் உயிரிழக்க காரணமானதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், 41 வயதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 9.15 மணியளவில் ஜாசின், ஆயர் மெர்பாவ் (Kampung Ayer Merbau) பகுதியிலுள்ள போக்குவரத்து விளக்குச் சந்திப்பில் இந்த விபத்து நடந்தது. ஆம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில், 18 வயதான Kolej Komuniti Bukit Beruang மாணவர் உயிரிழந்தார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் அவருக்கு 3,000 ரிங்கிட் பிணை வழங்கியதுடன், வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்தது. இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!