Latestமலேசியா

மாணவியை கொலை செய்து பாலுறவு கொண்ட ஆடவர்; 40 ஆண்டு தண்டனைக்குப் பின் விடுதலை

கூச்சிங் , நவ 22 – 18 வயது பள்ளி மாணவியைக் கொன்று, சடலத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டு, பின்னர் உடலைத் துண்டித்ததற்காக ஆடவரின் இயற்கையான ஆயுள் தண்டனையை அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் கூட்டரசு நீதிமன்றம் குறைத்ததை தொடர்ந்து நேற்று அந்த ஆடவர் விடுதலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நாளான 1993ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி முதல் ஜோன் நியூம்பே என்ற 57வயது நபருக்கு விதிக்கப்பட்ட கூடியபட்ச 40 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிப்பதாக மூவர் கொண்ட அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதிஜபரியா யூசுப் தீர்ப்பளித்தார். திருத்தப்பட்ட தண்டனையின்படி தண்டனை விதிக்கப்பட்ட நபரின் தண்டனை காலத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே எஞ்சியிருந்தததை கருத்திற்கொண்டு அந்த நபர் விடுதலை செய்யப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி விடியற்காலை மணி 5.30 க்கும் காலை 7 மணிக்குமிடையே ஜோங் லியு சின் என்ற மாணவியை அவரது வீட்டில் கொலை செய்து பின்னர் அவரது சடலத்துடன் பாலுறவு கொண்டு அவரது தலையை துண்டித்து காட்டில் தூக்கி வீசியதாக ஜோன் நியூம்பே மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சரவா, செபுகு, பாவ் என்ற இடத்திலுள்ள அம்மாணவியின் வீட்டில் இந்த கொலையை ஜோன் செய்துள்ளார். அந்த பெண் பள்ளி சீருடையுடன் தமது பெயர் பட்டை அணிந்திருந்த நிலையில் தலையில்லாத உடல் காட்டுப் பகுதியில் போலீசார் கண்டு பிடித்தனர்.

1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி கூச்சிங் உயர் நீதிமன்றத்தால் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜோன், அவரது கொலைக் குற்றம் மற்றும் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதன்பின் கூட்டரசு நீதிமற்றமும் பின்னர் நிலைநிறுத்தியது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி மன்னிப்பு வாரியத்தால் அவரது மரண தண்டனை இயற்கையான ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பின்னர் 2023 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் கூட்டரசு நீதிமன்றத்தில் தனது தண்டனையை மறுஆய்வு செய்யும் மனுவை ஜோன் தாக்கல் செய்தார், இது நீதிமன்றங்களுக்கு இயற்கையான ஆயுள் தண்டனையை 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!