Latestமலேசியா

மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் அரச நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டாம் – நெகிரி செம்பிலான் அரண்மனை ஆலோசனை

சிரம்பான், ஜூலை-27-ஆகஸ்ட் முதல் தேதி மாநிலத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், தங்கள் பிரச்சாரங்களிலும் நடவடிக்கைகளிலும் அரச நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என நெகிரி செம்பிலான் அரண்மனை ஆலோசனை கூறியுள்ளது

அரச நிறுவனம் எந்தவோர் அரசியல் கட்சியுடனும் சாராமல், முழுமையான நடுநிலைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

அரச குடும்ப அமைப்பு மக்களுக்கான ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்வதோடு, மாநிலத்தின் நல்லிணக்கம், நிலைதன்மை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுவதாக அரச குடும்ப விவகாரங்களுக்கான பொறுப்பாளர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் அரச அரண்மனை, ஆட்சியாளர் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த எவரையும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடுத்தும் வகையிலான கூற்றுகள், அறிக்கைகள், படங்கள், காணொளிகள் அல்லது பிற பொருட்கள் அனைத்தும் உண்மையில்லை.

மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மதம், அரச குடும்பம் மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாநிலத்தின் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் விவேகத்துடனும், அறநெறியுடனும், சட்டத்திற்கு உட்பட்டும் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

அதோடு சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும், உண்மையான தகவல்களுக்கு நெகிரி செம்பிலான் அரச அரண்மனையின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே அணுகுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, அரசியல்வாதி ஒருவர் நெகிரி செம்பிலான் அரண்மனை மற்றும் மந்திரி பெசார் பதவியுடன் DAP கட்சியைத் தொடர்புப்படுத்திய காணொளி பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!