குவாந்தான், செப்டம்பர்-30, பஹாங், மாரான் செல்லும் வழியில் Jalan Felda Jengka 4 சாலையில் 2 கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில், 4 சிறார்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
Honda City கார்கள் 3 ஆடவர்களும் 2 பெண்களும் இருந்த வேளை, Perodua Bezza காரில் ஓர் ஆடவர், 2 பெண்கள், 4 சிறார்கள் இருந்தனர்.
Honda City காருக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை தீயணைப்பு மீட்புத் துறையினர் வெளியே கொண்டு வந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இரு கார்களும் நேருக்கு நேர் மோதி அவற்றின் முன்பகுதிகள் நொறுங்கிபோன புகைப்படங்கள் முன்னதாக வைரலாகியிருந்தன.