Latestமலேசியா

மாலா வேலுவையும், மற்றொரு மலேசியரையும் விடுவிக்க நேப்பாள உள்துறை அமைச்சுக்கு பரிந்துரை

கோலாலம்பூர், மே 24 – ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்ட, மாலா veluவையும், மற்றொரு மலேசியரையும் நேப்பாள சிறையில் இருந்து விடுவிக்க, அந்நாட்டு உள்துறை அமைச்சிடம் பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரையும் விடுதலை செய்வதற்கான அனுமதியை பெற, தமது தரப்பு நேப்பாள வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருவதாக, நேப்பாளத்துக்கான மலேசிய தூதரகத்தின் அதிகாரி Mohd Firdaus Azman தெரிவித்துள்ளார்.

அதன் பயனாக, அவ்விருவரையும் விடுவிக்கும் பரிந்துறையை நேப்பாள வெளியுறவு அமைச்சு, அந்நாட்டின் உள்துறை அமைச்சிடம் முன் வைத்துள்ளதாக Firdaus சொன்னார்.

அவ்விவகாரம் குறித்த மேல் விவரங்களை அறிய, நேப்பாள உள்துறை அமைச்சரை சந்திக்க தமது தரப்பு காத்திருப்பதாகவும் Firdaus தெரிவித்தார்.

மலை Veluவுடன், நடராஜா ராமசாமி எனும் மலேசியரையும் விடுவிக்க, நேப்பாள வெளியுறவு அமைச்சு அதன் உள்துறை அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியவுடன், அவ்விவகாரம் நிதியமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன் வாயிலாக, அவ்விருவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை இரத்து செய்ய முடியுமா இல்லையா என்பது குறித்து முடிவுச் செய்யப்படும்.

அதன் பின்னர் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்ற பின்னர் அவர்கள் விடுவிக்கப்படலாம் என Firdausnadaraja ramasa கூறியுள்ளார்.

ஆட்கடத்தலுக்கு இலக்கான மாலாவின் அவலநிலை குறித்து, கடந்த திங்கட்கிழமை உள்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனை சேர்ந்த 57 வயது மாலா, தனது நேப்பாள காதலை நம்பி அந்நாட்டிற்கு சென்ற போது, கொத்தடிமையாக நடத்தப்பட்டு பல துன்பங்களுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பி, அதிகாரிகளின் உதவியை நாடிய அவர், விசா அனுமதியை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!