Latestமலேசியா

மின்சாரக் கட்டண உயர்வினால், 85% பயனர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்

புத்ராஜெயா, டிச 23 – சமநிலையின்மை செலவு, ICPT செயல்முறையின் அடிப்படையில், தீபகற்ப மலேசியாவில் உள்ள 85% அதாவது ஏழு மில்லியன் உள்நாட்டு பயனர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜுன் 30 வரையிலான மின் கட்டணத்தை மாற்றியமைப்பதால், பாதிப்பை எதிர்நோக்க மாட்டார்கள் என்று எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மாதம் ஒன்றுக்கு 220 ரிங்கிட் மின்கட்டணத்தை செலுத்தும் சுமார் 12 லட்சம் பயனீட்டாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து மாதாந்திர மின்கட்டணத்தில் 4.2 முதல் 6 விழுக்காடு அதிகரிப்பை எதிர்நோக்குவர்.

சம்பந்தப்பட்ட பயனீட்டாளர்கள் மின்சாரக் கட்டணத்திற்காக மாதம் ஒன்றுக்கு 12 ரிங்கிட் முதல் 32 ரிங்கிட் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கு 601 கிலோவாட் முதல் 1,500 கிலோவாட் வரை பயன்படுத்தும் உள்நாட்டு பயனிட்டாளர்கள், அரசாங்கத்தின் ICPT செயல்முறையின் கீழ் இனிமேல் ஒரு கிலோவாட்க்கு 2 சென் தள்ளுபடிக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

எனினும் 600 கிலோவாட்க்குக் குறைவாகப் பயன்படுத்தும் 7 மில்லியன் பயனிட்டாளர்களுக்கான, 2 சென்ட் தள்ளுபடி சலுகையில் எந்த மாற்றமும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!