Latestமலேசியா

மின்சார வாகனங்களுக்கான சாலை வரி விகிதம் அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம்; அந்தோனி லோக் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 31 – போக்குவரத்து அமைச்சு, மின்சார வாகனங்களுக்கான (EV) சாலை வரி விகிதத்தை இறுதித் செய்யும் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது.

அனைத்தும் கைக்கூடினால் அடுத்த மாதமே அது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

அதிகமான மக்கள் EVகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், உள் எரிப்பு இயந்திரம் (ICE) வாகனங்களுக்கான சாலை வரியை விட EVகளுக்கான சாலை வரி மலிவானதாக இருக்கும் என அவர் கோடி காட்டினார்.

ICE மற்றும் EV வாகனங்களின் எஞ்சின் திறனை (CC) ஒப்பிடுவதே சவால் என்றார் அவர்.

தற்சமயம் மின்சார வாகனங்களுக்கு சாலை வரி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!