Latestமலேசியா

மின் கட்டண முறை – 11.5 பில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனைகளை கடந்தாண்டு மலேசியா பதிவுச் செய்தது

கோலாலம்பூர், மார்ச் 21 – மலேசியர்களிடையே, கடந்தாண்டு ஆயிரத்து 150 கோடி மின் கட்டண பரிவர்த்தனைகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டு பதிவுச் செய்யப்பட்ட 950 கோடி பரிவர்த்தனைகளைக் காட்டிலும் இது அதிகமாகும்.

2022-ஆம் ஆண்டுக்கும் 2026-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தனிநபர் மின் கட்டண பரிவர்த்தனைகளின் விகிதத்தை 15 விழுக்காடு அதிகரிக்கும் இலக்கை நோக்கிய சரியான பாதையில் இருப்பதாக, நேற்று வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர அறிக்கையில், பேங்க் நெகாரா குறிப்பிட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு,285-ஆக பதிவான தனிநபர் பரிவர்த்தனைகள், கடந்தாண்டு 343-ஆக அதிகரித்ததே அதற்கு காரணம்.

மின் கட்டண முறையின் வளர்ச்சியானது, பயனீட்டாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு சில்லறை மின் கட்டண பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 17 விழுக்காடு அதிகரித்து 59 ஆயிரத்து 200 கோடியாக பதிவானது. பொது மற்றும் தனியார் கூட்டு ஒத்ழைப்பில், மின் கட்டண முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

DuitNow உட்பட கடன் பரிமாற்ற சேவைகள், 43 விழுக்காட்டு பயன்பாட்டுடன் மின் கட்டண பரிவர்த்தனைகளில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளதையும் பேங்க் நெகாரா சுட்டிக் காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!