Latestமலேசியா

மீண்டும் பேரரசரை சந்தித்து கே.கே மார்ட் தோற்றுவிப்பாளர் மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர், ஏப் 3 – மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் Ibrahim இன்று மீண்டும் K.K Supermart & Superstore Sdn Bhd ட்டின் தலைவரும் அதன் தோற்றுவிப்பாளருமான Chai Kee Kan னுக்கு பேட்டி வழங்கினார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற அந்த சந்திப்பு 15 நிமிடம் நடைபெற்றது. தனது விற்பனை நிலையங்களில் உள்ள சில கிளைகளில் Allah பதம் கொண்ட காலுறைகள் விற்கப்பட்டது தொடர்பில் பேரரசர் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மக்களிடம் Chai Kee Kan மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்ப்பதற்கு குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் கே.கே Mart உட்பட அனைத்து நிறுவனங்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என Sultan Ibrahim அறைகூவல் விடுத்தார்.

அனைத்து தரப்பினரும் கூடுதல் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். மீண்டும் இப்படியொரு தவறை செய்யக்கூடாது அல்லது இந்த தவறு மீண்டும் ஏற்படக்கூடாது என இறுதிமுறையாக தாம் வலியுறுத்துவதாக பேரரசர் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தை பயன்படுத்திக்கொண்டு இனியும் மக்களை எவரும் தூண்டக்கூடாது என்பதோடு இப்பிரச்னை மீண்டும் தொடர்வதை விரும்பவில்லை என்றும் Sultan Ibrahim நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!