Latestஉலகம்

மீம் நாயகன் கபோசு உயிரிழப்புக்கு எலன் மஸ்க் இரங்கல்

கோலாலம்பூர், மே 25 – சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான மீம் நாயகன் கபோசு எனும் நாய் உயிரிழந்தது. அதன் மரணம் குறித்து டுவிட்டர் உரிமையாளரான எலன் மஸ்க் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். கபோசு மடிந்தது சமூக வலைத்தள பயணர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் கொடுக்கும் முக பாவனைகளைக் கொண்டு அதிகமான மீம்கள் வெளிவந்துள்ளன.

ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் 2008ஆம் ஆண்டு கபோசுவை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 2010 ஆம் ஆண்டு அதன் உரிமையாளர் கபோசுவைச் கொண்டு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார். அப்போது கபோசு கொடுத்த அழகான போஸ்களும் ரியாக்சன்களும் இணையத்தில் பகிரப்பட்டதோடு இந்த புகைப்படங்கள் மீம்களாக உருவாகியதன் மூலம் பிரபலமானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!