Latestமலேசியா

முதலீட்டு மோசடி கும்பலுடன் தொடர்பு 3 நிறுவன இயக்குநர்கள் கைது

கோலாலம்பூர், டிச 12 – “Giganation GIB” முதலீட்டு மோசடி கும்பலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒரு நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களை போலீசார் கைது செய்தனர். 49 முதல் 57 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்ற விசாரணை துறையின் இயக்குனர் ரம்லி யூசுப் தெரிவித்திருக்கிறார். இந்த நிறுவனம் 2017 இல் செயல்படத் தொடங்கியதோடு சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களின் மேம்பாடு தொடர்பான வணிகங்களை மேற்கொண்டது என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். இந்த முதலீட்டு திட்டங்களுக்கான விளம்பரங்கள் நிறுவனத்தின் முகநூல் மற்றும் அதன் நியமிக்கப்பட்ட முகவர்கள் மூலம் செய்யப்பட்டன.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதல் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு லாப ஈவுத்தொகையைப் பெற்றனர். ஆனால் அதன் பிறகு பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது என்று செய்தியாளர் சந்திப்பில் ரம்லி கூறினார். மக்களை ஏமாற்றியதற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் அனைத்து சந்தேக நபர்களும் இன்றுவரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2021 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஒரு நிறுவனத்தில் RM4 மில்லியன் மோசடி முதலீடுகள் தொடர்பாக 57 போலீஸ் புகார்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். இதுவரை, மொத்தமாக RM3,992,486 இழப்புகள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!