Latestமலேசியா

முதல் முறையாக திருமணம் செய்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு RM500 ஊக்கத்தொகை – நெகிரி செம்பிலான் அரசாங்கம்

சிரம்பான், டிச 2 – முதல் முறையாக திருமணம் செய்துக் கொள்ளும் நெகிரி செம்பிலான் இளைஞர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்கத்தொகையை நெகிரி செம்பிலான் அரசாங்கம் வழங்கவுள்ளது.
இத்தொகை அடுத்தண்டு, 2024ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் அம்மாநில மந்திரி பெசார் Datuk Seri Aminuddin Harun. அதுமட்டுமல்லாமல், 70 வயதை அடையும் முதியோர்களுக்கு 200 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்துக்கான 2024ஆம் ஆண்டின் பட்ஜெட்டை நேற்று அறிவித்த போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
அதோடு அடுத்தாண்டு முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 ரிங்கிட் வழங்க, ஏறக்குறைய 16 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனித்து வாழும் தாய்மார்கள், 2000 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானம் பெறுபவர்களாக இருந்தால் அவர்களுக்கும் 200 ரிங்கிட் நன்கொடை வழங்கப்படவுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்ட மன்றத்தில் உள்ள சுமார் 100, B40 குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிளுக்கான உரிமத்தைப் பெற 100 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்க, சுமார் 5 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமினுடின் அறிவித்தார்.
அதே சமயத்தில், பள்ளி நிலையிலேயே தொழில் முனைவர்கள் உருவாக ஊக்குவிக்க TUNS Perintis எனும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும், மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில் முனைவர்களுக்கு அவர்களது பொருளின் தயாரிப்புத் தரம், அதனை பொட்டலமிடுதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை மேபடுத்த வழிகாட்ட 1 கோடி ரிங்கிட் ஒதுக்கிட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!