
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் முதலீட்டு வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரஸ்லான் ரகாஸ்லி (Razlan Raghazli), 139.8 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டபோது அக்குற்றச்சாட்டை நீதிபதியின் முன்னிலையில் மறுத்துள்ளார்.
43 வயதான ரஸ்லான், சட்ட ஆலோசனைக்கு இணங்குவதாகக் கூறி தவறான பணம் செலுத்தும் அட்டவணையை வழங்கி, UBB Amanah Bhd நிறுவனத்திடமிருந்து ELMU Higher Education நிறுவனத்திற்கு 139,891,776 ரிங்கிட் பணம் வழங்கச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றம் 2025 டேசா ஸ்ரீ ஹர்த்தாமாஸிலுல்ல (Desa Sri Hartamas) வங்கியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் அவருக்கு 60,000 ரிங்கிட் பிணை வழங்கியதுடன், கடப்பிதழை ஒப்படைக்கவும், வழக்கு சாட்சிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கு அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



