Latestஇந்தியாஉலகம்

மும்பையில் புழுதி புயல்; ராட்சத இரும்பு விளம்பர பலகை விழுந்து 12 பேர் மரணம்; 60 பேர் காயம்

மும்பை, மே 14 – மும்பையின் Ghatkoparரில் நேற்று மாலை வீசிய கடும் புழுதிப் புயலினால் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் மீது ராட்சத இரும்பு விளம்பர பலகை விழுந்ததில் 12 பேர் மரணம் அடைந்ததோடு 60 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் நடுவே அந்த இரும்பு பலகை கீழே விழுந்து கிடக்கும் காணொளிகள் வைரலாகி வருகின்றன.

விளம்பர பலகையின் உலோக சட்டம் எரிபொருள் நிலையத்தில் இருந்த பல கார்களின் கூரைகளையும் சேதப்படுத்தியுள்ளது.

அந்தப் பலகை கீழே விழுந்தபோது, அங்கு இருந்த அனைத்து கார்கள், மோட்டார் சைக்கிள்களுடன் மக்கள் சிக்கிக் கொண்டதோடு மக்களை வெளியே கொண்டு வரும் முயற்சியிலும் அங்கிருந்தவர்கள் உதவி புரிந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர். மக்களை மீட்பதே முன்னுரிமை என்றும், காயமடைந்தவர்களுக்கு அரசு சிகிச்சை அளிக்கும் என்றும் மகராஸ்டிர முதல்வர் Eknath Shinde கூறியுள்ளார்.

இந்த பலத்த புழுதிப் புயலால் போக்குவரத்து முடங்கியதோடு , மரங்கள் மற்றும் கட்டிடங்களும் சாய்ந்ததோடு பல மாவட்டங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

உள்ளூர் ரயில்கள், மெட்ரோ நெட்வொர்க்கின் ஒரு பகுதி மற்றும் விமான நிலைய சேவைகள் இருள் சூழ்ந்த வானத்தின் மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மோசமான வானிலை மற்றும் புழுதிப் புயல் காரணமாக, Chatrapati Shivaji Maharaj அனைத்துலக விமான நிலையத்தில் பார்க்கும் தூரம் தெளிவற்தாக இருப்பதோடு பலத்த காற்று காரணமாகவும் சுமார் 66 நிமிடங்களுக்கு விமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!