Latestமலேசியா

முறைத்துப் பார்த்ததால் மோதல்: கெப்போங் உணவகக் கலவரம் தொடர்பாக மூவர் கைது

கோலாலம்பூர், மே-12-கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

Jalan Besar Kepong-கில் ​கடந்த வியாழக்கிழமை காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் இன்னொருவரை முறைத்துப் பார்த்தால் ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கலவரமாக மாறியது.

இந்த மோதலின் போது உணவகத்தில் இருந்த நாற்காலிகள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் வீசி எறியப்பட்டன.

வைரலான வீடியோ தொடர்பில் விசாரணையில் இறங்கிய போலீஸ், 3 சந்தேக நபர்களைக் கைதுச் செய்து மே 14 வரை தடுத்து வைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!