Latestஉலகம்

முழு குர்ஆனையும் படித்து முடித்த நடிகர் வில் ஸ்மித், மீண்டும் வைரலாகிய காணொளி

கோலாலம்பூர், மார்ச் 21 – கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ரமலான் மாதத்தில் முழு குர்ஆனையும் படித்து முடித்ததாக தெரிவித்த காணொளி மீண்டும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பல விருதுகளை பெற்ற 56 வயது நடிகரான வில் ஸ்மித் புனித புத்தகங்களான Torah மற்றும் Bible போன்றவற்றையும் வாசித்திருக்கின்றாராம்.

எனினும், வாசித்த அனைத்திலும் குர் ஆனில்தான், தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாக அவர் அப்பேட்டியில் கூறியிருக்கின்றார். அதிலும், நபி மூசா கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

‘நான் எளிமையை விரும்பினேன். குர்ஆன் மிகவும் அதனை தெளிவாக விளக்கியுள்ளது. நான் கடந்த 2 வருடமாக தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் நெருக்கடியை அனுபவித்து வந்த சமயத்தில் அதிலிருந்து மீள்வதற்கு குர் ஆன் மிகப்பெரிய பங்காற்றியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு துர்கியில் கொடுக்கப்பட்ட இப்பேட்டி, இவ்வருட ரமலான் மாதத்தில் பரவலாக பகிரப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!