Latestமலேசியா

STPM 2025; CGPA புள்ளிகளை உயர்த்த ‘patching’ தேர்வு வாய்ப்பைப் பயன்படுத்துமாறு CUMIG அறைகூவல்

பெட்டாலிங் ஜெயா, ஜூன்-22-2025 STPM தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்ய, மாணவர்கள் ‘Patching’ தேர்வு முறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மலாயா பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகள் சங்கமான CUMIG அறைகூவல் விடுத்துள்ளது.

மலேசியத் தேர்வு வாரியத்தின் (MPM) இந்த அரிய வாய்ப்பு, மாணவர்களின் சராசரி தகுதிப் புள்ளியான CGPA-வை உயர்த்தி, அரசுப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை உறுதிச் செய்ய உதவும் என CUMIG சுட்டிக் காட்டியது.

எனவே CGPA புள்ளிகளை உயர்த்த விரும்பும் மாணவர்கள், பருவம் ஒன்று, இரண்டு அல்லது மூன்றுக்கான தாள்களை மீண்டும் எழுத உடனடியாக விண்ணப்பிக்குமாறு CUMIG உறுப்பினர் தேன்மொழி சங்கர் கேட்டுக் கொண்டார்.

இதற்கான இணையப் பதிவு, வரும் ஜூன் 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதற்கான அடிப்படைக் கட்டணம் 120 ரிங்கிட்டாகும்; அதோடு ஒவ்வொரு பாடத் தாளுக்கும் 50 ரிங்கிட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகள் வரும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை, மாநிலக் கல்வி இலாகாவால் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடைபெறும்.

இப்பதிவுத் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படும் மாணவர்கள், CUMIG-கின் பிரத்யேக உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!