
கோலாலம்பூர், நவ 7 -சிலாங்கூர், பேராக் மற்றும் பகாங்கில் உள்ள 10 நிவாரண மையங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1,003 பேர் இன்னமும் இருந்துவருகின்றனர். சிலாங்கூரில் திறக்கப்பட்ட 8 நிவாரண மையங்களில் 177 குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் இருந்து வருவதாக சிலாங்கூர் சமூக நலத்துறையின் வெள்ள பேரிடர் செயலியில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கில் தேசிய இடைநிலைப் பள்ளியில் 256 பேரும் இவர்களில் அடங்குவர். பேராவில் நான்கு நிவாரண மையங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 299 பேரும் பகாங்கில் திறக்கப்பட்டுள்ள ஒரு நிவாரண மையத்தில் நால்வரும் தங்கியிருக்கின்றனர்.