மூவார், நவம்பர்-18, மூவார், பக்ரியில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டவர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஓர் ஆடவர் கொல்லப்பட்டது தொடர்பில், முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.
கொலைக்குப் பிறகு தப்பியோடிய 2 பெண்களும் அவர்களில் அடங்குவர்.
மியன்மார், இந்தோனீசிய நாட்டவர்களான இருவரும் ஜோகூர் பாருவில் உள்ள வீடமைப்புப் பகுதியில் தனித்தனியாகக் கைதாகினர்.
மற்ற மூவரும் மியன்மார் ஆடவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் 11 பேருக்கு இடையில் மூண்ட சண்டையில், மரத்தளவாட தொழிற்சாலை ஊழியரான மியன்மார் ஆடவர் கொல்லப்பட்டார்.
தலையில் பலமான பொருளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தவர், சுல்தானா ஃபாத்திமா மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது உயிரிழந்தார்.